நண்டான்கோவில்

 நண்டான்கோவில்

 : தல வரலாறு  

கற்கடம் என்றால் நண்டு. நண்டு பூசித்த தலமாதலால் ஈஸ்வரர் கற்கடேஸ்வரர் ஆனார். [1] தற்பாேது இக்கோவில் நண்டான்கோவில் என்றே அழைக்கப்படுகிறது. இந்த ஊர் திருந்துதேவன்குடி என்றும் அழைக்கப்படுகிறது. இந்திரன் சாபத்திற்கு ஆளான கந்தர்வன் நண்டாக இவ்வாலயம் வந்து பூசித்தார். தினமும் நள்ளிரவில் தீர்த்த குளத்தில் தாமரை மலரை கோமுகம் இறைவனுக்கு சாத்தி வழிபட்டு வந்தது. இந்திரன் அதிகாலையில் இந்த ஆலயம் வந்து தாமரை மலர்சூட்டி வழிபடுவது வழக்கம். தனக்கு முன் மலர் சூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதை கண்காணித்த பொழுது நள்ளிரவில் தீர்த்த குளத்தில் இருந்து தாமரை மலர் ஒன்று கோமுகம் வழியே ஈசனிடம் செல்வதுகண்டு வியந்தபோது உன்னால் நண்டாக சாபம் பெற்ற கந்தர்வனே மலர் கொண்டு பூசித்தான். உன்னை கண்டு பயந்து ஒளிந்து கொண்டுள்ளான் என ஈசனிடம் இருந்து அசரீரி கேட்டது. ஆடி அமாவாசை பூர நட்சத்திரத்தன்று காறாம் பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்யும் போது லிங்கத்திருமேனியின் பிளவில் இருந்து பொன் நிற நண்டு வந்து காட்சி அளிக்கும் என்று வசிஷ்டமகாத்மியம் நூலில் கூறப்பட்டுள்ளது. 6-2-2003-ல் கும்பாபிஷேக முதல் நாள் யாகபூசையின் போது யாககுண்டத்தை நண்டு வலம் வந்த அதிசயம் நடந்ததை கண்டதாக கூறப்படுகிறது.மன்னர் ஒருவர் கடும்நோயால் பாதிக்கப்பட்டு இவ்வாலய ஈசனை வேண்டி குணம் அடைந்தார். அம்மன்னன் பிரதிஷ்டை செய்த அம்மனே அருமருந்தம்மை ஆகும். இது நோய் தீர்க்கும் பரிகார தலமாக விளங்குகிறது. அம்மனுக்கு சாத்தி தரப்படும் எண்ணெய் சர்வ வியாதிகளுக்கும் நிவாரணமாக கருதப்படுகிறது. கோவில் வெளிப்புர சுவற்றில் மருத்துவர் மருந்து தயாரிப்பது போன்ற புடைப்புச்சிற்பம் காணப்படுகிறது.

 

 திருந்துதேவன்குடி (நண்டாங்கோயில் / திருத்தேவன்குடி) (திருவிசலூர்)

இறைவர் திருப்பெயர்:

கர்க்கடகேஸ்வரர் (கர்க்கடகம் - நண்டு).

இறைவியார் திருப்பெயர்:

அருமருந்தம்மை, அபூர்வநாயகி.

தல மரம்:

பெரியாநங்கை


தீர்த்தம் :

அகிலி, பங்கய தீர்த்தம்-காவிரிநதி.

வழிபட்டோர்:

சம்பந்தர், அப்பர், சேக்கிழார், நண்டு

 திருந்துதேவன்குடி என்னும் பெயருடைய ஊர் தற்போது இல்லை. கோயில் மட்டுமே உள்ளது. கோயில் இருந்த இடம் நன்செய் நிலங்களாயின. கோயிலைச் சுற்றி அகழியுள்ளது. இப்பகுதி திருந்துதேவன்குடி என்று சொல்லப்படுகிறது, மிகப் பெரிய சிவாலயம், பழுதடைந்துள்ளது. சுவாமி அம்பாள் கருவறைகளும் முன் மண்டபங்களும் மட்டுமே உள்ளன. (2009)


 


இத்தல இறைவன் அரசன் ஒருவனுக்கு இருந்த கொடிய வியாதியை, கிழவர்போல வந்து தீர்த்தருளிய தலம்.


 


வழிபட்டு நோய் நீங்கப்பெற்ற மன்னன் செய்த பிரதிஷ்டை 'அருமருந்தம்மை' யாகும். பின்னர் பழமையாக இருந்த அம்பாளும் கண்டெடுக்கப்பட்டு அதுவும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதுவே 'அபூர்வநாயகி' திருமேனியாகும்.