தில்லை யாடி
தலவரலாறு :
சோழ மன்னன் ஒருவன் திருக்கடையூர் கோவிலுக்கு நன்கொடை வழங்கி , புதுப்பித்து குடமுழுக்கு செய்யும் வரை , மந்திரியிடம் பார்த்து கொள்ளுமாறு கூறினார் .மந்திரி தில்லையாடி சிவன் கோவிலையும் புதுப்பித்தார் இதனை அறிந்த விக்ரம சோழ மன்னன் மந்திரியின் கைளை வெட்ட தன்னுடைய வாளை ஒங்க , சிவபெருமான் முன்னே தோன்றி மந்திரியை காக்க , அந்த ஒளி தாங்க முடியாமல் மன்னரின் கண் பார்வை பறி போனது .மன்னர் தில்லையாடி கோவில் வந்து ஈசனே வழிபட்டு மீண்டும் கண் பார்வை பெற்றரர். தன்னை நாடி வருபவர்களை காப்பதால் இவர் சார்ந்தாரைக் காத்த நாதர் கோயில் என அழைக்கப்படுகிறார் .
பெருமாள் வழிபட்ட கோவில்
இரண்யட்சகன் என்ற அசுரனே கொன்றதால் வீர ஹத்தி தோஷம் ஏற்பட்டது .அதனை போக்க , திருமால் திருவீழிமலையில் சிவபெருமானே வழிபட்டு சக்கர ஆயுதம் பெற்று தில்லைவனம் வந்தார் .திருமால் சக்கரா ஆயுதம் கொண்டு உருவாக்கிய தீர்த்தம் சக்கர தீர்த்தம் ஆயிற்று . இங்கு திருமால் யாளி(குதிரை) வடிவம் கொண்டு பூஜை செய்தார் .தில்லையாளி என்பது காலப்போக்கில் தில்லையாடி என அழைக்கப்படுகிறது.இன்றும் கோவில் கொடி மரத்தில் இந்த காட்சி உள்ளது.
இந்திரன் வழிபட்ட தலம் :
தில்லையில் நடனமாடியது போல இங்கும் ஆட வேண்டும் என இந்திரன் வேண்ட , சிவபெருமான் ஆடியதால் தில்லை யாடி எனவும் பெயர் காரணம் கூறப்படுகிறது