செங்கன்னூர் மகாதேவர் கோயில்,
செங்கண்ணூர் சிவன் கோயில் அல்லது செங்கன்னூர் பகவதி கோயில் என்பது, கேரளாவின் ஆலப்புழாவின் செங்கன்னூர் நகரில் அமைந்துள்ள சிவாலயம் ஆகும். இங்குள்ள பகவதியும்) புகழ்பெற்றவள் என்பதால், இது பகவதி கோயிலாகவும் கருதப்படுகின்றது. மானுடப் பெண்டிருக்கு ஏற்படும் மாதவிடாய் இங்குள்ள பகவதிக்கும் ஏற்படுகின்றது என்பது அதிசயம் ஆகும். ஆண்டின் வருடாந்திர விழா, டிசம்பர் - ஜனவரி மாதங்களில் இருபத்தெட்டு நாட்கள் இடம்பெறுகின்றது.
இங்கு வீற்றிருக்கும் பகவதியே கண்ணகியாக அவதரித்தாள்.[5] கண்ணகி விண்ணுலகுக்கு ஏகிய திருச்செங்குன்றம் இதுவே என்று சொல்லப்படுகின்றது